திருப்பூரில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி தனது கணவன் பேஸ்புக் மற்றும் ட்விட்டர், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கியதால் ஆத்திரம் அடைந்த மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை விட செல்போன் மீது தான் கணவனுக்கு மோகம்! கண்டுகொள்ளாத ஏக்கத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

திருச்சி தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(25), இவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரேணுகாதேவி (18)என்ற பெண்ணிற்கும் நட்பு ஏற்பட்டுள்ளது நண்பர்களாக பழகிய இவர்கள் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவரது பெற்றோரும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சொந்த ஊரில் இருந்தால் தங்களை பிரித்து விடுவார்கள் என அஞ்சி இருவரும் திருப்பூர் அவிநாசி பகுதியிலுள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து வசித்து வந்தனர்.
அதே பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளனர் இந்நிலையில் சக்திவேல் என்பவர் அதிக அளவில் சமூகவலைதளங்களில் மூழ்கி இருப்பதாகவும், தன்னிடம் ஏதும் பேசாமல் இருப்பதாகவும் அடிக்கடி ரேணுகா தேவி தனது கணவருடன் ஏக்கத்தில் சண்டையிட்டுள்ளார்.
சக்திவேல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் தனது செல்போனை எடுத்துக்கொண்டு அதில் பேஸ்புக்,ட்விட்டர் மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் தனது பொழுதை கழித்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி முதலில் இருந்தது போல் தன் மீது உங்களுக்கு காதல் இல்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதை அனைத்தும் காதில் வாங்கிக் கொள்ளாத சக்திவேல் திரும்பவும் தனது போனில் சமூக வலைதளங்களில் பார்க்க ஆரம்பித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரேணுகாதேவி இந்த மாதிரி செய்தால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என சக்திவேலிடம் தெரிவித்துள்ளார். இதையும் சக்திவேல் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது இந்நிலையில் ரேணுகா தேவி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தன் உடம்பில் நெருப்பு பற்ற வைத்துக் கொண்டாள்.
இதையடுத்து அவரது உடல் முழுவதும் நெருப்பு பற்றி எரிய அருகிலிருந்தவர்கள் உடனே ஓடிவந்து ரேணுகா தேவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அவிநாசி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையை அடுத்து தனது கணவர் தனது மனைவியுடன் சந்தோசமாக இல்லாமல் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்ததே இந்த கொலைக்கான காரணம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.