மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பச்சைக் குழந்தையை கொடூரமாக ஒரு நபர் தாக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பச்சிளம் குழந்தையை ரண கொடூரமாக அடிக்கும் டிப் டாக் தந்தை! பதற வைக்கும் வீடியோ! அதிர வைக்கும் பின்னணி!

மும்பையில், பார்ப்பதற்கு மிகவும் நாகரிகமானவராக தோன்றும் ஒரு குழந்தையை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்குவது போல் காட்சி வெளியாகி உள்ளது. அப்படி அந்த குழந்தையை தாக்குபவர் தந்தை எனவும் கூறப்படுகிறது.
இதை பார்த்த சமூகவலைதளவாசிகள் பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். வீடியோவை பார்த்த சிலர் கண்கலங்கி விட்டனர்.
இந்த கொடூரமான வீடியோ மும்பையின் சுனபட்டி பகுதியில் இருந்து வெளியானதாகக் கூறப்படும் நிலையில், வீடியோ குறித்த ஆதாரங்கள் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய காவல் அதிகாரி ஒருவர் ஒரு குழந்தையை இப்படி கொடூரமாக தாக்குபவர் தந்தையாக இருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் ஏன் அந்த குழந்தையை அவ்வாறு அடித்துள்ளார் என்பதும் அவரை கண்டுபிடித்து விசாரித்த பின்னரே தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சமூக வலைதளங்களில் இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வரும். ஆனால் அதுபோன்ற வீடியோக்கள் மேலைநாடுகளில் குழந்தைகளை பார்த்துகொள்ளும் பணிப் பெண்கள் அந்த குழந்தைகள் சேஷ்டை செய்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் கண்டபடி அடிப்பர். அது அந்த வீட்டில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகி இருக்கும். பின்னர் அந்த ஆதாரத்தை வைத்து உடனடியாக அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள்.