திருவாரூர் மாவட்டம் ஆணைவடபாதி பாலத்தின் வழியே சென்றபோது பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் கார் அந்தரத்தில் தொங்கியது அதில் பயணம் செய்த 4 பேரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திடீரென பாலம் இடிந்து, அந்தரத்தில் தொங்கிய கார்... பயணம் செய்த 4 பேருக்கு என்ன ஆச்சு? திருவாரூர் திடுக் சம்பவம்

திருவாரூர் மாவட்டம் கோடைச்சேரி அருகே அம்மையப்பன் ஆணைவடபாதி அருகே வாளவாய்க்கால் என்ற வாய்க்காலின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலமானது ஆற்றை கடக்க மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பாலத்தின் வழியே இருசக்கர வாகனம் மற்றும் கார் மட்டுமே செல்ல முடியும் கனரக வாகனங்கள் ஏதும் அந்த பாலத்தின் வழியே செல்ல முடியாது. இதையடுத்து இந்த பாலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இந்த பாலம் சுமார் 6 அடி அகலம் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் நேற்று தணிகாசலம் என்பவர் தனது குடும்பத்துடன் ஆணைவடபாதி அம்மையப்பன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பாலத்தை கடக்க முயற்சிக்கையில் அவரது வாகனம் தடுமாறி நின்றது இந்நிலையில் சிறிது பதற்றம் நிலவிய நிலையில் சிறிது நேரம் கழித்து பாலம் உடைய தொடங்கியது பாலம் உடைந்து கார் அந்தரத்தில் தொங்கிய நிலையில் காரில் இருந்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காரில் வந்த தணிகாச்சலம், அவருடைய மனைவி சாரதா(40), தினேஷ்(வயது 11), கார் டிரைவர் வெங்கடேஷ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து கார் விபத்து ஏற்பட்டதை அறிந்த இந்த ஊர் மக்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காரை பாலத்தில் இருந்து வெளியே எடுக்க இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்