விருதுகள் என்றாலே அது, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் ஜால்ரா போடுபவர்களுக்கும் செய்யப்படும் மரியாதை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பணம் வாங்கிக்கொண்டு விருது கொடுக்கிறாரா திருமாவளவன்? நல்லி குப்புசாமிக்கு செம்மொழி ஞாயிறு விருதுக்கு கேள்வி எழுப்பும் இளம் சிறுத்தைகள்!

அந்த வகையில் இந்த ஆண்டு விடுதலை சிறுத்தைகள் விருது அறிவிப்பு கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இன்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இருந்து ஓர் அறிவிப்பு வெளியானது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம்.
2019ம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
அம்பேத்கர் சுடர் _ இந்து ஊடகக் குழுமத்தின் தலைவர் என்.ராம்
பெரியார் ஒளி _ வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன்
காமராசர் கதிர் _ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சு
காயிதேமில்லத் பிறை _ - வரலாற்று அறிஞர் செ.திவான்
அயோத்திதாசர் ஆதவன் _ நாகப்பன், சென்னை
செம்மொழி ஞாயிறு _ நல்லி குப்புசாமி
ஜூலை 29ம் தேதி காமராஜர் அரங்கத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பணம் வாங்கிக்கொண்டு நல்லி குப்புசாமிக்கும், பத்திரிகைகளில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்து என் ராமுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக இளம் சிறுத்தைகள் பொங்குகிறார்கள்.
கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாத திருமாவளவன் இப்படி செய்யலாமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஏதாச்சும் பதில் சொல்லு சமாளிங்கப்பா...