மோடிக்கு அரசியல் சொல்லித்தர எத்தனையோ ஆட்கள் இருக்கிறார்கள்.
மோடிக்கு பொருளாதாரம் சொல்லித்தர யாருமே இல்லையா? எங்கே போகுது இந்தியா?

மோடியை புரமோட் செய்வதற்கு எத்தனையோ ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், பொருளாதாரப் பிரச்சனைகளை சரியான முறையில் ஆராய்ந்து ஆலோசனை வழங்க சிறந்த அனுபவமிக்க பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசிடம் இன்றைக்கு இல்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது என்கிறார் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானம். இதோ அவரது பதிவு.
ஏனென்றால், கடந்த 70 ஆண்டுகளாக மொகலானபிஸ், வி.கே.ஆர்.வி.ராவ், கே.என். ராஜ், சுக்மாய் சக்கரவர்த்தி, மன்மோகன் சிங், கௌஷிக் பாசு, ரகுராம் ராஜன் போன்ற உலக புகழ்பெற்ற தலைசிறந்த பொருளாதார அறிஞர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே பொருளாதார முடிவுகள் எடுக்கப்பட்டன.
தனது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு அடிப்படை கட்டுமானங்களுக்கு ரூ. 100 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்து, 5 டிரில்லியன் அமெரிக்கா டாலருக்கு நிகரான பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்று வழக்கம் போல் சூளுரைத்தார். அப்படியானால் அரசு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய வேண்டும்.
இதற்கான நிதி ஆதாரங்களுக்கு ஏதாவது வாய்ப்பு உள்ளதா என்று பார்ப்போம். நடப்பு நிதியாண்டியின் மொத்த செலவு 27.9 லடசம் கோடி ருபாய். அனால் வரவு வெறும் 19.6 லடசம் கோடி ருபாய். இந்த பற்றாக்குறையினை சரி செய்ய அரசு பட்ஜெட்டுக்குள் வாங்கும் கடன் 7 லடசம் கோடி ருபாய்.
பட்ஜெட்டுக்கு வெளியில் வாங்கும் கடன் 5-6 லட்சம் கோடி ரூபாய். இந்த கடன்களுக்கு செலுத்தும் வட்டி தான் அரசின் செலவுகளில் மிக அதிகமானது. மேலும் பட்ஜெட்டுக்குள் வாங்கும் கடன் முழுவதும் வட்டி செலுத்தவே சரியாக உள்ளது. இப்படி இருக்கும்போது எப்படி பொருளாதாரம் சீரடையும் என்று கேள்வி எழுப்புகிறார்.
மன்மோகனிடம் கேட்கலாமே மோடி..?