ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்கதமிழ்செல்வன் நிற்பதற்கு ஆசைப்பட்டார். ஏனென்றால் அவரால் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும். அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதாலே, தேனி நாடாளுமன்றத் தேர்தலில் தங்கதமிழ் செல்வனை நிறுத்தினார் தினகரன்.
எடப்பாடிக்கு தூதுவிடும் தங்கதமிழ் செல்வன்! பன்னீருக்கு ஆப்பு ரெடி!

ஏகமாய் பணத்தைக் கொட்டினாலும் வெற்றி என்னவோ சிக்கல்தான். இந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்திருத்து எடப்பாடிக்கு தூது அனுப்பியிருக்கிறாராம் தங்கதமிழ்செல்வன். அதற்கு அவர் வைக்கும் ஒரே நிபந்தனை இதுதான்.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்தப் பகுதியில் கொடுக்கும் செல்வாக்கை குறைத்துவிட்டு, எனக்கும் என் ஆட்களுக்கும் கட்சியில் நல்ல பதவி கொடுத்தால் போதும் என்று கேட்கிறாராம். ஆட்சி இருக்கிறதோ இல்லையோ, கட்சிப் பதவி வைத்து அள்ளலாம் என்று ஆசைப்படுகிறார். ஏனென்றால், இப்போது அ.ம.மு.க.வில் கட்சிப் பதவிக்கு மேலிடமே நேரடியாக பணம் வாங்கிக்கொள்கிறதாம்.
எடப்பாடிக்கு இந்த டீல் ரொம்பவே பிடித்திருக்கிறது. ஏனென்றால் இப்போது கட்சியில் அவருக்கு இருக்கும் ஒரே எதிரி பன்னீர்செல்வம் மட்டும்தான். அவரும் பா.ஜ.க. துணையுடன் குடைச்சல் கொடுக்கிறார். ஆக, இடைத்தேர்தலில் எட்டு சீட் கிடைத்தாலே போதும், நீங்கள் வந்துவிடலாம் என்று கிரீன் சிக்னல் தங்கதமிழ்செல்வனுக்குப் போயிருக்கிறதாம்.