மாணவர்களின் தேர்வு ரிசல்ட்டை அலட்சியமாக கையாண்டதில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11ம் வகுப்பில் சேர்ந்த பிறகு 10ம் வகுப்பில் ஃபெயில் என அறிவித்த கல்வித்துறை! மாணவி எடுத்த விபரீத முடிவு!

தெலுங்கான மாநில இடை நிலை தேர்வு (10ம் வகுப்பு )எழுதிய 3.28 லட்சம் மாணவர்கள் தோல்வியடைந்தாதாக அறிவிக்கபட்டதைபடுத்து 26 மாணவ, மாணவிகள் தற்கொலை க்கு முயன்றது பெரும் பரபரப்பான ஏற்படுத்தியுள்ளது. அனமிகா அருட்லா தெலுங்கு பாடத்தில், 20 மதிப்பெண் எடுத்த நிலையில் ரிவாலியூசன் கொடுத்துள்ளார் இதனை அடுத்து வெளியான மதிப்பெண்ணில் 48 வாங்கி பாஸ் ஆகியுள்ளார்.
இதனை அடுத்து அவர் 11ம் வகுப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் அருட்லா தேர்வுத் தாளை திருத்தியதல் தவறு நேர்ந்துள்ளதாக கூறி அவரை மீண்டும் பெயில் ஆக்கியுள்ளனர். அதாவது அவர் 21 மதிப்பெண் மட்டுமே பெற்றதாக கூறியுள்ளார். ஆனால் ஏற்கனவே ரிவேல்யுவேசன் மூலமாக கிடைத்த மதிப்பெண்ணால் அம்மாணவி 11ம் வகுப்பில் சேர்ந்துவிட்டார்.
அவரை தற்போது பெயில் என்று அறிவித்த காரணத்தினால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். இப்படியாக இந்த தேர்வு முடிவு குளறுபடி காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும தெலுங்கானாவில் 20க்கும்மேற்பட்ட மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.