சென்னையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு துணை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிந்து சென்ற கணவன்! உறவுக்கார இளைஞனை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்த நடிகை! பிறகு ஏற்பட்ட விபரீதம்!

சென்னை திருவொற்றியூர் பகுதிக்குட்பட்ட காலடிப்பேட்டையில் வசித்து வந்தவர் துணை நடிகையான பத்மஜா. இவருக்கும் பவன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் கணவர் பவன் ஆந்திரா சென்றுவிட்டார்.
இதையடுத்து சினிமாவுக்கு அடிக்கடி சூட்டிங் செல்ல வேண்டும் என்பதால் 2 வயது குழந்தையை உறவினர் வீட்டில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் பத்மஜா தனிமையில் இருக்கும்போது ஒரு நபர் அடிக்கடி வருவதாகவும் இதை வீட்டு உரிமையாளர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்னர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஒரு வீடியோவை பெங்களுருவில் வசிக்கும் சகோதரிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் யாருக்கும் தெரியவில்லை. 3 நாட்களுக்கு பின்னர் பத்மஜா உடல் அழுகி தூர்நாற்றம் வீசத் தொடங்கி உள்ளது.
சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் போலிசுக்கு தகவல் தந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து பத்மஜாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பத்மஜா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? பத்மஜா வீட்டிற்கு அடிக்கடி வந்த நபர் யார்?
தற்போது ஏன் தலைமறைவாகிவிட்டார் என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பத்மஜா தற்கொலை சம்பவம் குறித்து கோட்டாட்சியரும் விசாரித்து வரும் நிலையில் அவர் தற்கொலைக்கு முன் வெளியிட்ட வீடியோவை கைப்பற்றி அதில் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணத்தை தெரிவித்துள்ளாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.