பேசியே காரியம் சாதிக்கும் தலைவர்கள் உண்டு. அதேபோல் பேசியே காரியத்தைக் கெடுக்கும் தலைவர்களும் உண்டு.
தலைமறைவாகிறாரா சீமான்? வாய்க்கொழுப்பு பேச்ச்சால் ஏழு பேர் விடுதலை அம்புட்டுத்தான்!

அந்த விஷயத்தில் காரியத்தைக் கெடுக்கும் நபராக மாறியிருக்கிறார் நாம்தமிழர் சீமான். சமீபத்தில் அவர் பேசிய பேச்சு ஏழு பேர் விடுதலைக்கு ஆப்பு வைத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திடீரென பொங்கினார் சீமான். அப்போது, ‘நாங்கதான் ராஜீவ்காந்தியைக் கொன்றோம். ஒரு நாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது இந்திய அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலே கொன்று புதைத்தோம்’ என்று வரலாறு எழுதப்படும் என்று வீராவேசமாகப் பேசினார்.
இந்தப் பேச்சுதான் அவருக்கு மட்டுமின்றி ராஜீவ் கொலையில் விடுதலை ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட ஏழு பேருக்கும் ஆப்பு வைத்துள்ளது. சீமான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, தங்கபாலு போன்றவர்கள் கடுமையாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்கள் தலைவர் சீமான் ஒருபோதும் சொன்ன சொல்லை வாபஸ் வாங்க மாட்டார். கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சவே மாட்டார், கைதாகி சிறைக்குச் செல்லவும் தயங்க மாட்டார் என்று அவரது தம்பிகள் பேசி வருகிறார்கள். இது உண்மையா என்பது விரைவில் தெரிந்துவிடும். ஏனென்றால், இப்போதே முன் ஜாமீனுக்கு வழக்கறிஞர்களிடம் பேசி வரும் சீமான், தலைமறைவாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
பேசாமல் இருந்தால் ஏழு பேர் விடுதலை சாத்தியமாகி இருக்கும், இப்படி பேசி கெடுத்துப்புட்டார், இப்போது காங்கிரஸ் அந்த விடுதலையை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டது என்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள். இப்படி பண்ணிட்டீங்களே சீமான்..!