கமல்ஹாசன் விவகாரத்தை பா.ஜ.க.வை விட அ.தி.மு.க.தான் அதிக ஆவேசமாக எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆளும் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்துவரும் பிரேமலதாவிடம், கமல் விவகாரம் குறித்து ஆவேசமாக பேசும்படி மேலிடத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதாம்.
அ.தி.மு.க.வுக்கு ஆப்பு வைத்த பிரேமலதா! டென்ஷனில் ராஜேந்திர பாலாஜி!

ஆனால், அவர் வழக்கம்போல் பிரசாரம் மட்டும் செய்துவிட்டு போனாராம். இதையடுத்து மீண்டும் மீண்டும் கமல்ஹாசனை திட்டி பேசும்படி நோட் கொடுக்கப்பட்டதாம். இதைக் கண்டு டென்ஷன ஆனாராம் பிரேமலதா.
அதனால் அடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து, கமல்ஹாசன் பேசியது தவறு என்றால், அதற்கு அமைச்சர்கள் பேசியதும் தவறுதான். பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது என்று கறாராகப் பேசிவிட்டுப் போனார்.
இதைக் கேட்டு ராஜேந்திர பாலாஜி டென்ஷன் ஆனாராம். நம்மகிட்ட காசு வாங்கிட்டு, நம்மளையே திட்டிப் பேசுறாங்க என்று கொதித்தாராம். ரிசல்ட் வர்ற வரைக்கும் அடங்கியிரு என்று அடக்கப்பட்டாராம் ராஜேந்திர பாலாஜி.