உணவில் காயத்திற்கு போடும் பாண்டேஜ் இருந்ததால், புகார் கூறிய இளைஞர்களை மிரட்டிய தலப்பாகட்டி பிரியாணி கடை ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தலப்பாகட்டி பிரியாணியில் ரத்தக்கறையுடன் பேண்டேஜ்! அதிர்ந்த கஸ்டமர்! மிரட்டிய ஊழியர்கள்!

நேற்று கரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தலப்பாகட்டி பிரியாணி உணவகத்திற்கு சாப்பிட வந்த இளைஞர் ஒருவருக்கு வழங்கிய பிரியாணியில் காயத்திற்கு போடும் பாண்டேஜ் ஒன்று இருந்துள்ளது. மேலும் அது ரத்தக் கறையுடன் வேறு இருந்துள்ளது. இது பற்றி கடை நிர்வாகியிடம் புகார் கூறிய போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள், கடை நிர்வாகி அடாவடித்தனமாக பதில் கூறியதை கண்ட தும் சத்தம் போட்டு சாப்பாட்டை முழுவதும் சாப்பிடாமல் கடையின் முன் திரளாக கூடினர். தகவல் அறிந்த கரூர் காவல் துறையினர் இது பற்றி விசாரித்தனர். கூடவே உணவு கட்டுப்பாடு மற்றும் சுகாதார ஆய்வாளரிடம் புகார் அளித்தனர்.
அப்போது பிரியாணியில் பேன்ட் எய்ட் இருந்த பிரியாணியை அதிகாரிகளிடம் காட்டியுள்ளனர் அதிகாரிகள். அதனை சோதனைக்கு எடுத்துக் கொண்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதே சமயம் இளைஞர்களை மிரட்டிய தலப்பா கட்டி கடை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்படி உலகம் முழுவதும் பிரபலமாக விளங்கும் தலப்பா கட்டி பிரியாணி கடையில் பிரியாணியில் ரத்தக் கரையுடன் பேன்ட் ஏஜ் இருந்தது சாதாரண விஷயமாக தெரியவில்லை. ஏனென்றால் அந்த ரத்தம் ஏதேனும் தொற்று நோய் கிருமிக்கு உரியதாக இருந்தால் சாப்பிடுபவரின் நிலை என்னவாகி இருக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.