ஏன்டா அப்டி பண்ணுன? அரசு அதிகாரிக்கு விரட்டி விரட்டி செருப்படி! ஏழைப் பெண் ருத்ரதாண்டவம்! அதிர வைக்கும் காரணம்!

மத்தியப் பிரதேசத்தில் அரசாங்க திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் அம்மாநிலத்தின் அரசு அதிகாரியை காலணியால் தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசு சார்பில் வீடு வழங்கும் திட்டமாக “குவாலியரில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா” என்ற திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. 

இந்த நிலையில், அரசாங்க திட்டத்தின் கீழ், முறையாக வீடுகள் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி பெண்கள் சிலர் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அந்த பெண் ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளும் தவறான பயனாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி மேலும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுட்டார்.

இதற்கிடையே, அரசு அதிகாரிகள் அந்த பெண்ணின் குற்றச்சாட்டை பெரிதாக அக்கறை காட்டாத நிலையில், அந்த அதிகாரிகள் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார், பின்னர் ஆத்திரமடைந்து பெண் அதிகாரியின் பின்னாலேயே சென்று காலணியால் தாக்கி தனது கோபத்தை அரசு அதிகாரிகள் மேல் காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்து அங்கு இருந்த அனைவரும், அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அதிகாரியை தாக்கும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது, தற்போது அந்த அரசு அதிகாரிகள் தாக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றது.