நடுரோட்டில் காரை நிறுத்தி திமுக பிரமுகர் அடாவடி! முதியவரை அடித்து உதைத்து அக்கிரமம்!

அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு இருந்த நன்மதிப்பு குறைந்து வருவது துருதிர்ஷ்டவசமானது. ஒரு சாதாரண அரசியல் கட்சி பிரமுகர் செய்யும் தவறுகளால் கட்சியின் மொத்த நன்மதிப்பும் குறைந்து வருகிறது.


இதேபோன்று சென்னையின் முக்கிய ஹோட்டல் ஒன்றில் திமுக கட்சி பிரமுகர் செய்த அடாவடித்தனம் மக்கள் அனைவரையும் முகம் சுளிக்க செய்துள்ளது. மாணிக்கம் என்பவர் திமுகவின் பிரமுகராவார். இவர் சென்னையில் உள்ள கீரிம்ஸ் சாலையில் உள்ள மிகப்பிரபலமான சுகந்திரா ஹோட்டலின் நடுரோட்டில் தன் காரை நிறுத்தியுள்ளார்.

அப்போது அந்த காரை முதியவர் ஒருவர் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது அவர் லேசாக காரின் ஓரமாக உரசியுள்ளார். உடனே காரிலிருந்து வெளியே வந்த மாணிக்கத்தின் தாயாரும், அண்ணனும் அந்த முதியவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் அவரை தரைப்பலகையினால் அடித்துள்ளனர்.

பின்னர் அவரருகில் இருந்த பொது மக்கள் மாணிக்கத்தை தட்டிக்கேட்டனர். அதற்கு மாணிக்கம் தன் வேட்டியை உயர்த்தி காட்டி ஆபாசமாக பேசியுள்ளார். மாணிக்கத்தின் மனைவி செல்வி, ரத்து செய்யப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் ஆயிரம்விளக்கு பகுதியின் கவுன்சிலர் வேட்பாளராக திமுக சார்பில் நிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.