இந்தியா முழுவதுமே குடிப்பவர்கள் எண்ணிக்கை பெருகிவருகிறது. அது தமிழகத்தில் மேலும் அதிகம். இதுகுறித்து 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் தெரிவிக்கும் புள்ளிவிபரப்படி, 17 ஆண்களுக்கு ஒரு பெண் மது குடிப்பவராக இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல்தான்.
பதினேழு ஆண்களுக்கு ஒரு பெண் மது அருந்துபவரா? அதிர்ச்சி தகவல்.

கடந்த சில வருடங்களாகவே பெண்கள் (பள்ளிப்பருவம் முதல் முதியவர்கள் வரை) மது பழக்கத்தில் சிக்கியிருப்பதை புகைப்படங்கள், வீடியோ மூலம் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன. பொதுவாகவே இன்றைய வாழ்க்கை சூழல் பெண்களை அவர்களது இயல்பு தன்மையிலிருந்து, குறிப்பாக நேர்மையிலிருந்து விலக்கி ஆண்களுக்கு நிகராக தவறுகள் புரிய துணிவைத் தந்து கொண்டிருக்கிறது.
அதற்கு அவர்கள் 'அதனால் என்ன தப்பு ?' என்று தவறுகளை நியாயப்படுத்துகின்றனர். அதில் ஒன்று தான் மதுப்பழக்கம்.
இன்று நாடெங்கும் மது மறப்பு சிகிக்சை முகாம்கள் பெருகி வருகின்றன. அதில் ஆண்டு தோறும் சிகிக்சை பெற வரும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கமே மதுக்கடைகளை நடத்தினால், இப்படித்தான் சமூகம் ஆண் பெண் வித்தியாசமின்றி மாறித் தொலைக்கும். ஆனால், இதில் சந்தோஷப்பட வேண்டிய ஒரே ஒரு விஷயம் உள்ளது. அது, மாநில நகரங்களை விட தமிழ்நாட்டின் நகரங்களில் மது அருந்தும் பெண்கள் குறைவு என்பதுதான்.