எனக்கு வீடு கேட்டு யாரும் போராட வேண்டாம்! அதனால்தான் அவர் நல்லகண்ணு!

ஏற்கெனவே ஒரு முறை நல்லகண்ணு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று அரசிடம் இருந்து உத்தரவு வந்தது. அவர் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வீட்டை காலி செய்த நேரத்தில் சில கட்சிக்காரர்கள் வந்துவிடவே, உடனே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தகவல் கொடுத்து, போராட்டம் நடத்தி வீட்ட்டை மீட்டுக் கொடுத்தனர்.


அந்த வகையில் அரசு குடியிருப்பில் வாடகை கொடுத்து குடியிருந்தார் நல்லகண்ணு. அவருடைய மனைவியின் மறைவுக்குப் பிறகு மகள் வீட்டுக்கு அழைத்தும் போகவில்லை. இந்த நிலையில்தான் அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துறை நோட்டீஸ் விட்டதைத் தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், கோரிக்கையையும் முன்வைக்காமல் வெளியேறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணுக்கு இப்போது 94 வயது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில், வீட்டை காலி செய்ய  அரசு நோட்டீஸ் அனுப்பியதும், யாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக வெளியேறிவிட்டார்

மாற்றுவீடு தராமல் வெளியேற்றக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கொந்தளிக்கும் நிலையில், இதுகுறித்துப் பேசவும், மீண்டும் அரசிடம் வீடு வாங்கவும் நல்லகண்ணு தயாராக இல்லையாம். யாரும் எனக்காக போராட வேண்டாம் என்றும் சொல்கிறார். அதனால்தான் அவர் நல்லகண்ணு. இப்படிப்பட்ட தலைவர்கள் இருக்கும்போதே கெளரவிக்காமல் விரட்டுவது ஆட்சிக்குத்தான் அவமானம்.