வீட்டோடு மருமகன் ஆன கணவன்..! திருமணமான 2 மாதத்தில் இளம் பெண் எடுத்த பகீர் முடிவு! திருவள்ளூர் பரிதாபம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணம் ஆன இரண்டு மாதங்களில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த மேல்முதலம்பேடு பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவருக்கும், சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜ் என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சில பொருளாதார சிக்கல் காரணமாக வீட்டோடு மாப்பிள்ளையாக தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார் மருமகன் நாகராஜ்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த புதுமணப்பெண் ரம்யா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் அறிந்து வந்த கவரைப்பேட்டை போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

ரம்யா ஏற்கனவே ஒருவரை காதலித்து விருப்பமின்றி இந்த திருமணம் செய்து கொண்டாரா அல்லது கணவர் ஏதேனும் தகராறில் ஈடுபட்டாரா என சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார் ரம்யாவின் தாய் கவுசல்யா மற்றும் கணவர் நாகராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் தலைமையிலான விசாரணையும் நடைபெற்று வருகிறது.