கடந்த தேர்தலில் ஜெயித்து ஆட்சிக்கு வந்த மோடி நான்கு ஆண்டு காலமும் மக்களுக்கு எந்த பயனும் தராத பட்ஜெட்தான் போட்டார்.
தங்கம் விலை, பெட்ரோல் விலையை ஏத்துறதுதான் புதிய இந்தியாவுக்கான பட்ஜெட்டா? கோ பேக் மோடியை ஆரம்பிக்க வேண்டியதுதான்!

தேர்தல் நெருங்கியதும்தான், வருமான வரிச்சலுகையை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தினார். அது மக்களிடம் வாக்குகளை திருடுவதற்காக செய்யப்பட்ட யுக்தி என்பது உறுதியாகியுள்ளது. இனிமேல் மோடி நல்ல திட்டங்களைத் தருவார் என்ற எண்ணத்தில் நல்ல மெஜாரிட்டியுடன் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தார்கள். தன்னை ஜெயிக்கவைத்த இந்திய மக்களுக்கு, தான் யார் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மோடி.
ஆம், பொதுமக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், தங்கம் விலை உயர்வதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதை கச்சிதமாகச் செய்து காட்டியுள்ளார். நாட்டின் உட்கட்டமைப்பை உயர்த்துகிறோம், நீர்வழிப் பாதையை அறிமுகப்படுத்துகிறோம் என்று ஐந்து ஆண்டுகளாக என்ன சொல்லிவந்தார்களோ, அதையே பட்ஜெட்டில் மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார்கள். முழுக்க முழுக்க தனியார் மயத்தை நோக்கி நாடு சென்றுகொண்டு இருக்கிறது.
இப்போது யாராவது இந்த பட்ஜெட் சரியில்லை என்று சொல்லாமல் இருப்பதுதான் நல்லது, ஏனென்றால் நேரு சரியாக பட்ஜெட் போடாத காரணத்தாலே, நாங்கள் இப்படியொரு பட்ஜெட் போடும் சூழல் ஏற்பட்டது என்று செத்துப்போன மனுஷனை நாறடிப்பார்கள். அதனால் தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் கோ பேக் மோடி என்பதை இப்போதே தொடங்கினால்தான், அடுத்த ஆண்டாவது மக்களுக்கான பட்ஜெட் கிடைக்கும்.