நயன்தாரா விவகாரம்! ராதாரவிக்கு எதிராக களமிறங்கிய அவரது மருமகள் மற்றும் சகோதரி!

நயன்தாராவுக்கு எதிராக ஆபாசமான கருத்து தெரிவித்த ராதாரவிக்கு எதிராக அவரது மருமகள் வரலட்சுமி மற்றும் சகோதரி ராதிகா களமிறங்கியுள்ளனர்.


ராதாரவி குறித்து நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கொலையுதிர் காலம் செய்தியாளர் சந்திப்பில் ராதாரவி என்ன பேசினார் என்று தான் முழுவதுமாக பார்க்கவில்லை என்று ராதிகா கூறியுள்ளார்.

ஆனால் ராதாரவியை நேரில் சந்தித்து நயன்தாரா குறித்து நீங்கள் பேசியது தவறு என்று திட்டவட்டமாக தெரிவித்ததாக ராதிகா கூறியுள்ளார். இதேபோல் சரத்குமாரின் மகளும் ராதாரவிக்கு மருமகள் முறையும் கொண்ட வரலட்சுமி ராதாரவிக்கு எதிராக கடும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

ராதாரவி போன்ற மனிதர்கள் எப்போதுமே ஆணாதிக்கம் மிக்கவர்கள் என்று வரலட்சுமி கூறியுள்ளார். பெண்களை போகப்பொருளாகவும் அவர்களை இழிவுபடுத்தி மகிழ்ச்சி காணும் நபர்களாகவும் இவர்கள் இருப்பதாகவும் அவர் வசை பாடி உள்ளார்.

ராதாரவி போன்ற நபர்களை குற்றம் சாட்டாமல் பெண்கள் அணியும் உடைகளை தற்போதும் சிலர் பிரச்சனையாக்கி வருவது அவர்களுக்குள் இருக்கும் அழுக்கை அப்பட்டமாக காட்டுகிறது என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார். இதே போன்று வேறு சிலரும் ராதாரவிக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.