33 வயது தான் ஆகுது..! ஆனால் அம்மா கேரக்டர் தான் கொடுக்குறாங்க..! நாயகி சீரியல் வசந்தி!

சென்னை: நாயகி சீரியலில் அம்மாவாக நடிக்கும் நடிகை, தனது உண்மையான வயது இதுதான் எனக் கூறி பலரையும் வியக்கச் செய்துள்ளார்.


சீரியல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சீரியல்களில் ஒன்று நாயகி. இது, சன் டிவியில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில், கதாநாயகனின் தாயாக நடிக்கும் 'வசந்தி' பலரின் கவனம் ஈர்த்த நடிகையாக உள்ளார்.

இந்நிலையில், அவர் இணையதளம் ஒன்றில் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், தனது வயது உள்ளிட்ட பல சுவாரசியமான விசயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஆம். இதன்படி, வசந்தி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரது உண்மையான பெயர் மீரா கிருஷ்ணன். இவர், மார்க்கம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.

பிறகு, திருமணமாகி சென்னையில் செட்டில் ஆன மீராவின் கணவர் சிவா, ராகவா லாரன்ஸிடம் உதவியாளராகப் பணிபுரிகிறார். இந்நிலையில், மீராவுக்கு நாயகி சீரியலில் வாய்ப்பு கிடைக்க, அவர் படிப்படியாக, தனது நடிப்பை மெருகேற்றிக் கொண்டதன் மூலமாக, தற்போது சின்னத்திரையில் பலரது கவனம் ஈர்த்த நடிகையாக மாறியுள்ளார்.

இதுதவிர, தனக்கு 33 வயதுதான் ஆகிறது என்றும், சிறு வயதில் இருந்தே மலையாள சீரியல்களில் அம்மாவாக நடித்து வருவதால், தற்போதைய நாயகி சீரியலிலும் கதாநாயகனின் அம்மா வேடத்தில் நடிப்பது எளிதாகிவிட்டதாக, அவர் கூறுகிறார். 50 வயதான நபர் போல இருந்தாலும், தனது உண்மையான வயது இதுதான் எனக் கூறும் மீரா, விஜய் சேதுபதிக்கு அக்கா அல்லது அம்மா வேடத்தில் நடிப்பதே தனது லட்சியம் என்றும் குறிப்பிடுகிறார்...