பேரன் பேத்தி எடுத்த பாட்டிகள் அழகுப் போட்டி! ஒய்யார நடையில் அசத்திய முதிர் பெண்கள்!

தேசிய அளவில் நடைபெற்ற பாட்டிகளுக்கான அழகிப் போட்டியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் முதல் பரிசை தட்டிச் சென்றார்.


கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி எனும் பகுதியில் “மிஸ்ட்ரஸ் இந்தியா கிராண்ட் மதர்- 2019” எனும் பெயரில் பாட்டிகளுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. தேசிய அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாடு முழுவதும் வந்த மூதாட்டிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நளினமான நடையுடன் அணிவகுத்து வந்து, பார்வையாளர்களின் கவனத்தை பெற்றனர்.  

தேசிய அளவிலான போட்டி என்பதால் ஆந்திரா, பீகார், டெல்லி , கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட 19 மாநிலங்களிலிருந்து தலா ஒருவர் வீதம் 19 போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களது அழகை வெளிப்படுத்தும் விதமாக நளின நடைபோட்டுச் சென்றனர். பாட்டிகள் அணிவகுத்து வந்தபோது அவர்களின் உறவினர்கள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், சிறந்த சிகை அலங்காரம், சிறந்த உடல் கட்டமைப்பு, சிறந்த இளமை தோற்றம் என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. கடைசியாக 3 போட்டியாளர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். கர்நாடகத்தைச் சார்ந்த ஆர்த்தி என்ற பெண் இந்திய அளவில் அழகிப் பாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு மகுடம் சூட்டி கவுரவிக்கப்பட்டது. வயது முதிர்ந்த சில பாட்டிகள் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிந்ததால் சில பெர்சுகள் அவர்களை பார்த்து ஜொல்லு விட்டதில் வாயில் தண்ணி ஊரியது என்பதெல்லாம் நமக்கு தேவை இல்லாத விஷயம்.