பத்தனம்திட்டா: 18 வயது இளம்பெண்ணை தீயிட்டு கொளுத்திய கயவனை போலீசார் கைது செய்தனர்.
18 வயது இளம் பெண்ணை நடு ரோட்டில் தீ வைத்து எரித்து ஆண் நண்பன்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லா நகரம் உள்ளது. இங்கு, இன்று (மார்ச் 12) பட்டப்பகலில் 18 வயது இளம்பெண்ணை, ஒரு இளைஞன் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளான். அந்த பெண், நெருப்பெரிய மரண ஓலமிட்ட நிலையில், அந்த இளைஞன் தப்பியோட முயற்சித்துள்ளான். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் சுற்றி வளைத்து, தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் நடத்திய விசாரணையில், அந்த இளைஞனின் பெயர் அஜின் ரெஜி என்றும், சம்பந்தப்பட்ட பெண் உடன் நீண்ட நாட்களாக பழகிவந்துள்ளதும் தெரியவந்தது. ஆனால், அஜின் ரெஜியை அந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக நிராகரித்து வந்துள்ளார். இதில், விரக்தி அடைந்த அஜின், பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொல்ல முயன்றதாக, போலீசில் கூறியுள்ளான்.
இதற்கிடையே, அந்த இளம்பெண் 60 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.