கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசின் மெகா சலுகைகள் ரெடி! ஏன்? எதற்கு? எப்படி தெரியுமா?

இந்தியாவின் கார்ப்பரேட் வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு.


தாராளமயமாக்கலுக்கு பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு துணை போகிறது என்று பலவாறான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்ற இந்த சூழலில்.

இந்தியாவில் உள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வதற்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மத்திய நேரடி வரி வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு. புதிய கார்ப்பரேட் வரி விகித பகுப்பாய்வை பரிந்துரைத்துள்ளது. 

அந்த புதிய வரிச்சலுகைகளால்,இந்தியாவில் நடைமுறையில் உள்ள பழமையான வரிச் சட்டத்தில் ஒரு மிப்பெரிய மாற்றம் ஏற்படப் போகின்றது எனவும்.  

மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராள வரிச்சலுகையை கொடுக்க இந்த பரிந்துரை வழிவகை செய்யும் என அஞ்சுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்

இந்தியாவில் நடைமுறையிலுள்ள வரிச் சட்டத்தின் படி. அனைத்து பெரிய மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 30% வரி‌ வசூலிக்கப்படுகிறது .  

அந்த வரியை 25 சதவிகிதமாக  குறைக்கவும், வரி செலுத்துதலுக்கான தாமதக் கட்டணத்தை குறைக்கவும். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த திங்கள் கிழமை அன்று. நேரடி வரி வாரிய உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன் தலைமையிலான குழு  தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

அகிலேஷ் ரஞ்சனின் அறிக்கையை மறு ஆய்வு செய்த நிதி அமைச்சக வட்டாரம், வருமான வரிச் சட்டத்தை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.  

2017 இல் உருவாக்கப்பட்ட இந்த குழுவின் முக்கிய பணி. வருமான வரிச் சட்டத்தை மாற்றி. மற்ற நாடுகளுக்கு ஏற்ப வரி முறையை இலகுவாக கொண்டு வருவதற்கும், பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த நடைமுறைகளை இணைப்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 5600 கோடி வரி.  பெரு நிறுவனங்கள் மூலம் பிடித்தம் செய்யப்பட்டு, இந்தியா  உலகில் மிக உயர்ந்த கார்ப்பரேட் வரி விதிப்பு நாடாக திகழ்கிறது.

தற்போதைய நடைமுறையின் படி. இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 30% கார்ப்பரேட் வரி விகிதமும். 40% வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விதிக்கப்படுகிறது.

இந்த பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர். நிதி அமைச்சகம் இந்த அறிக்கையை ஆய்வு செய்யும் என்று அமைச்சக வட்டாரங்கள் கூறுகிறது,

வருகின்ற 2020/21 பட்ஜெட்டில் இந்த தாராள வரிச்சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சுங்கம் மற்றும் கலால் வரியாக இந்தியாவின் மொத்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 5% க்கும் மேல் ரிலையன்ஸ் நிறுவனம் வரி கட்டுவது கவனிக்கத்தக்கது.  இந்தியாவிலேயே தனியார் துறையில் அதிக வருமான வரி செலுத்துவது ரிலையன்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் செலுத்தப்படும் வரிகளில் தனிநபர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களால் இந்திய அரசுக்கு நேரடியாக செலுத்தப்படும் வரிகள் நேரடி வரியின் கீழ் வருகின்றன.  நேரடி வரியின் கீழ் செலுத்தப்படும் வரிகளில், தனிநபர் வருமான வரி, மூலதன ஆதாய வரி, பத்திர பரிவர்த்தனை வரி, தேவை வரி, பெருநிறுவன வருமான வரி, விளிம்பு வரி, விவசாயத்தின் மீதான வரி வரி ஆகியவை அடங்கும்.

அதற்கு அடுத்தபடியாக அரசுக்கு மிகப்பெரிய வருவாயை கொடுக்கும்  மறைமு வரி எனப்படும் . சேவை வரிகளாகும். பிரிவு 66 பி இன் கீழ் ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் வழங்கும் சேவைகளின் வரிவிதிப்பை மத்திய அரசு நிதிச் சட்டம் 1994 மூலம் நிர்வகிக்கிறது. 

மறைமுக வரியாக செயல்பட்டு வந்த இந்த சேவை வரி தற்போது ஜிஎஸ்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிகபட்சமாக 18% தனிநபர்களிடமும்  வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

மணியன் கலியமூர்த்தி