ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான திறந்தவெளி அனுமதி கொள்கையின்கீழ் தமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதியை ஓ.என்.ஜி.சி. மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
விடாமல் துரத்தும் மோடி! தமிழகத்தில் மேலும் 20 ஹைட்ரோ கார்பன் கிணறு!

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் open acreage licensing என்ற கொள்கையை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களையும் ஒரே உரிமத்தின் மூலம் கண்டறிந்து எடுப்பது தான் இக்கொள்கையின் நோக்கமாகும்.
அதன்படி முதல்கட்ட ஏலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. அந்த ஏலத்தில் இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 55 இடங்களில் 41 இடங்களில் வேதாந்தா நிறுவனம் ஏலம் எடுத்தது. மீதமுள்ள இடங்களில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றன.. ஏலம் விடப்பட்ட 55 இடங்களில் மூன்று இடங்கள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் 2 இடங்களை வேதாந்தாவும், 1 இடத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனமும் பெற்றிருந்தது.
இரண்டாம் மற்றும்.மூன்றாம் கட்ட ஏல அறிவிப்பு கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் விடுக்கப்பட்டது. இதில் இரண்டாம் கட்ட ஏலத்தில். இரண்டாம் கட்டத்தில் நாகப்பட்டினாம் மாவட்ட்தின் 474சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 4கிணறுகள் அமைப்பதற்கான அனுமதி இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. மூன்றாம் கட்டத்தில் நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 1863சதுர கிலோ.மீட்டர் பரப்பளவில் 16கிணறுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.