கொட்டிய மழை! பெருக்கெடுத்த வைகை! ஆழம் தெரியாமல் காலை விட்ட மதுரைகாரருக்கு ஏற்பட்ட விபரீதம்! பரபரப்பு நிமிடங்கள்!

மதுரை வைகை ஆற்றில் வெள்ளத்தில் அடிச்செல்லப்பட்டவரை, 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.


தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்துவரும் கனமழையின் எதிரொலியாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.   

இந்நிலையில், வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பினால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மதுரை ஆட்சியர் ஆற்றில் இறங்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

மதுரை வைகை ஆற்றில் ஓடும் நீரை காண ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். ஓடும் ஆற்றில் விசையின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக ஈஸ்வரன் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.

பின்னர், தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் ஈஸ்வரனை தேடி உள்ளனர். இவர் சுமார் 5 கிலோ மீட்டருக்கு இழுத்துவரப்பட்டு குருவிக்காரன்சாலைப் பாலம் அருகே மணல்மேட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். பின்னர் தீயணைப்பு துறை வீரர்கள் கயிறு கட்டி குருவிக்காரன்சாலைப் பாலத்தில் இறங்கி சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின் ஈஸ்வரனை மீட்டுள்ளனர்.