மும்பையில் ஒருவன் தன்னுடன் தவறான உறவுக்கு உடன்பட மறுத்த பெண்ணின் 4 வயது மகளை தலையை வெட்டிக் கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
தகாத உறவுக்கு மறுப்பு! இளம் பெண்ணின் 4 வயது மகள் தலையை துண்டித்த கொடூரம்!

4 வயதுச் சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை. அந்த நாள் முழுவதும் சிறுமியை தேடிக் கண்டுபிடிக்க அவளின் பெற்றோர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை அதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தேடி வந்த போலீசார், சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து சிறுமியின் உடலை கண்டுபிடித்தனர். போலீசாரின் தொடர் விசாரணையும்,
சந்தர்ப்ப சாட்சியங்களும் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசித்த நபரைச் சிக்கச் செய்தன.
அவனது முட்டியை பதம் பார்த்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. அந்த நபர் சிறுமியின் தாயை தன்னுடன் தவறான உறவுக்கு அழைத்ததாகவும் அதற்கு அந்தப் பெண் உடன்பட மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த நபர் தொடர்ந்து தொந்தரவு செய்ததால் அவனை அந்தப் பெண் திட்டியும் சரியாக கவனித்தும் அனுப்பியிருக்கிறார். இதையடுத்து ஆத்திரத்தில் இருந்த அந்த நபர் அந்தப் பெண்ணை எவ்வாறேனும் பழிதீர்க்கத் துடித்துக்கொண்டிருந்தான்.
அவனது காமம் குரோதமாகம் மாறி 4 வயதுச் சிறுமியின் மீது திரும்பியது.
தன்னை மறுத்த பெண்ணின் இன்பமயமான வாழ்வுக்கு காரணமான சிறுமியின் வாழ்க்கையை முடித்துவிடக் காத்திருந்த அவனுக்கு அதற்கான தருணமும் சிக்கியது.
சுற்றிலும் ஆளில்லாத ஒரு நேரத்தில் வீட்டின் ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வாயைப் பொத்தி தூக்கிச் சென்ற அவன் , சிறுமியின் தலையை வெட்டி புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றான்.
இவை அனைத்தையும் விசாரணையில் ஒப்புக்கொண்ட அவன் தற்போது சட்டத்தின் தண்டனைக்கு காத்திருக்கிறான். ’ஆசைக்கு
இணங்க மறுத்த பெண்ணின் மகளை கயவன் கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.