போனில் கூட பேச மறுத்து அவமதித்த மம்தா! நேரில் வரவைத்து கெத்து காட்டிய மோடி!

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் கூட பேச மறுத்த மம்தா பானர்ஜி தற்போது அவரது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இடையே கடும் போட்டி நிலவியது. பரஸ்பரம் இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசே இருக்காது என்று மோடி சூளுரைத்தார்.

இதைப்போல் பானிப்புயல் பாதிப்புகள் குறித்து பேசுவதற்கு பிரதமர் மோடி இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசுவதற்கு மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துவிட்டார். பதவியில் இருந்து தூக்கி எறிய படப்போகும் ஒரு பிரதமருடன் தான் எதற்கு பேச வேண்டும் என்று எகத்தாளமாக வேறு கேள்வி எழுப்பினார் மம்தா.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் மோடி அரசு அமைகிறது. வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு மம்தா பானர்ஜிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டது. இதற்கிடையே என்ற திருநாமமும் கட்சியில் இருந்து மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் 30 கவுன்சிலர்களை பாஜக தன்னுடைய கட்சிகள் இணைத்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மம்தா பானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக ஒரு முப்பதாம் தேதி டெல்லி செல்லும் மம்தா இரவு நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டங்களை தொடர மீண்டும் பிரதமராகும் மோடியின் தயவு மம்தாவிற்கு தேவை. எனவேதான் தொலைபேசியில் பேச மறுத்த நிலையில் தற்போது பதவியேற்பு விழாவிற்கு நேரிலேயே செல்ல இறங்கி வந்துள்ளார் மம்தா. அதே சமயம் தன்னிடம் தொலைபேசியில் பேச மறுத்த ஒருவரை தன்னை சந்திக்க நேரில் வரவழைத்து இருக்கிறார் பிரதமர் மோடி.