தூத்துக்குடி அருகே சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரில் பயணம் செய்தார் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒன் வேயில் விபரீத பயணம்..! காரை சுக்கு நூறாக்கிய லாரி! 2 இளம் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் உயிர் பறிபோன பயங்கரம்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலை அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில் காரில் வந்தவர்கள் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் 73 மற்றும் அவரது மனைவி லட்சுமி இவர்கள் இருவரும் பொங்கல் விழாவை முன்னிட்டு தங்களது உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளனர்.
மதுரையில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு திருச்செந்தூர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுடன் அவர்களது உறவினர்களான வீரேந்திரன் (15), அவரது சகோதரி ரம்யா (20), ரம்யாவின் தோழி பார்கவி ஆகியோர் மற்றொரு காரில் சென்றனர். இவர்களது காரை டிரைவர் ஓட்டி வந்துள்ளார்.கார் நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே மேம்பாலத்தின் ஒருவழிப்பாதையில் வந்து கொண்டிருந்த நிலையில் எதிரே தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு லாரி வந்தது.
அந்த லாரியை மதுரை பேரையூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ஓட்டினார். லாரி ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது இதையடுத்து லாரியை கண்ணு முன்னு தெரியாமல் ஓட்டி வந்துள்ளார்.அப்போது கண் இமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியது. இது எடுத்து காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது இந்நிலையில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய வீரேந்திரன் என்பவர் அது உடலை மீட்க ஜேசிபி இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அவரது உடலும் தற்போது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுநர் சந்திரசேகர் என்பவரை பிடித்து காவல்துறையினர் இந்த விபத்து குறித்து மேலும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து சீரான நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.