கனிமொழி என்ன சொல்றாங்கன்னு கேளுங்கப்பா! 1.76 லட்சம் கோடி அம்புட்டுத்தானாம்!

2ஜி வழக்கில் இந்தியாவையே உலுக்கிய 1.76 லட்சம் கோடி பற்றி தெரியாதவர் யாரும் இருக்கவே முடியாது.


காங்கிரஸ் அரசை தலைகுப்புறத் தள்ளிய விவகாரம் அது. அதேபோன்று மோடி அரசுக்கும் 1.76 லட்சம் கோடி விவகாரம் சிக்கியிருக்கிறது. மாமியாருக்கு அத்தனை காரியங்களும் முடித்து சென்னை திரும்பிய கனிமொழி, இந்த விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.

கடந்த 45 வருடங்களாக இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சியை பார்க்க முடிகிறது. வேலையில்லா திண்டாட்டம் மக்களை பாதித்துள்ளது. இதனை சரி செய்ய மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யாமல் உள்ளது.

கடந்த முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது உலக அளவில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவந்த நேரத்தில், அப்போதைய மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தது. அதனால் இந்தியப் பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது.

ஆனால், தற்போது மத்திய அரசு எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளாமல், தொலைநோக்கு பார்வையில்லாமல் ஆட்சி செய்து வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இது மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கும்" என்றார்.

அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்.