மும்பை நகரத்தில் உள்ள அரசு அலுவலக கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
என் புருசன எங்கடா? தலைமைச் செயலகத்தின் 4வது மாடியில் இருந்து குதித்த இளம் பெண்! அதிர வைக்கும் காரணம்!

மும்பையில் உள்ள மந்திராலயா - அரசு தலைமை அலுவலகத்தின் 4 ஆவது மாடியில் இருந்து இளம் பெண் ஒருவர் வேகமாக கீழே விழுந்து முதல் தளத்தில் இருந்த கம்பி வளையத்தில் சிக்கி கிடந்தார். சம்பவத்தன்று நூற்றுக்கணக்கான அரசு அதிகாரிகள் அங்கு பரபரப்பாக உள்ளும் புறமாக இயங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது.
கீழே விழுந்து கிடந்த அந்த இளம் பெண் சிறிது நேரத்திற்க்கு எந்த அசைவும் இல்லாமல் கிடந்தார், இதனால் பதட்டம் அடைந்த மக்கள் அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தான் தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண் பிரியங்கா குப்தா எனவும் அவர் தானே பகுதியை சேர்ந்தவர் எனவும், அவரது கணவரை அந்த ஊர் காவல் துறை சில சொற்ப வழக்குகளுக்காக பிடித்து வைத்துள்ளதால் அவரை விடுதலை செய்யக்கோரி அடிக்கடி அவர் அங்கு வந்து கோரிக்கை வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் தான் , கணவரை மீட்க முடியாமல் தவித்து வந்த பிரியங்கா குப்தா வேறு வழியில்லாமல் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த மந்திரா அலுவலகத்தில் 6 க்கும் மேலான உயிரிழப்புகள் நடந்துள்ளது, அதில் முதிய விவசாயி ஒருவர் விஷம் குடித்து இறந்து போன சம்பவமும் அரங்கேறியுள்ளதும், குறிப்பிடத்தக்கது.