அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து கொட்டிய பண மழை..! அத்தனையும் ரூ.2000, ரூ.500, ரூ.100! ஆனந்தத்தில் திக்குமுக்காடிய மக்கள்! எங்கு தெரியுமா?

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனைக்கு பயந்து மாடியிலிருந்து வீதிக்கு கட்டுக்கட்டாக பணம் வீசப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் உற்சாகமாக அள்ளிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பென்டிக் சாலையில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் நேற்றைய தினம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  

இதனிடையே நிறுவனத்தின் உரிமையாளர் தனது ஊழியர்கள் மூலம் பதுக்கி வைத்து பணத்தை கொடுத்து, 6வது மாடியில் இருந்து பென்டிக் சாலையில் 100, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் கொண்ட கட்டுகளை வீசி எறிந்துள்ளனர். 

அந்த வழியாக சென்றவர்கள் பொதுமக்கள் திடீரென பணக்கட்டை பார்த்ததும் ஆச்சரியத்தில் கூட்டம் கூட்டமாக குவிந்து பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை அப்பகுதியில் நின்ற ஒருவர் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதன் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.  

எவ்வளவு பணம் வீதியில் வீசப்பட்டது என்பது குறித்து தற்போது வரை தகவல்கள் தெரியவில்லை.