ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கோஹ்லி மற்றும் அஸ்வின் இடையேயான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஸ்வினின் கேட்சை பிடித்து கையை அசைத்து வம்பிழுத்த கோஹ்லி! கடுப்பான அஸ்வின் பதிலுக்கு என்ன செய்தார் தெரியுமா?

கடைசி ஓவரில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்தில் அஸ்வின் சிக்ஸ் அடித்தார். இரண்டாவது பந்தையும் சிக்ஸ் அடிக்க முயன்ற அஸ்வினை , பவுண்டரி லைனில் கோஹ்லி கேட்ச் பிடித்து அவரை வெளியேற்றினார். கேட்ச் பிடித்து அஸ்வினை பார்த்து கையை அசைத்து செய்கையில் கோஹ்லி ஆக்ரோஷமாக கோவத்தை வெளிப்படுத்தினார்.
இதை கண்ட அஸ்வின் மைதானத்தை விட்டு வெளியே கடந்து செல்லும் போது தனது கிளவுசை ஆக்ரோஷமாக
தூக்கி தரையில் போட்டு தனது கோவத்தை வெளிப்படுத்தினார். இந்த செயலால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.