கமல்ஹாசன் ஒரு தடவை சொன்னதை மோடி ஆட்கள் 100 தடவை சொல்லியிருக்காங்க! என்ன தெரியுமா?

நாதுராம் விநாயக் கோட்சேவை தீவிரவாதி என்று கமல்ஹாசன் சொன்ன விவகாரம் நாலைந்து நாட்களாகவே பற்றி எரிகிறது. நாக்கை வெட்டுவேன் என்று தொடங்கி, நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பது வரை வந்து நிற்கிறது.


இந்த நிலையில் கமல்ஹாசன் பேசிய ஒற்றை விஷயத்துக்கே இப்படி துடிப்பவர்கள், பா.ஜ.க.வினர் இதுவரை எப்படியெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது நல்லது.

இந்துக்கள் எல்லாம் தீவிரவாதியாக இருக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி 

இந்துக்களின் விந்தை முஸ்லீம் கருவுக்குள் செலுத்துங்கள் - ராமகோபாலன்

சூலாயுதத்தில் மூன்றை கொண்டு, நடுநிலை இந்துக்களை, முஸ்லிம்களை, கிறிஸ்தவர்களை கொல்ல வேண்டும் - பிரவீன் தொக்காடியா

முஸ்லிம்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்  - சாத்வி பிராச்சி 

மசூதி என்பது வழிபாட்டு தலமல்ல, ஒரு கட்டடம் மட்டுமே எனவே அதனை எந்நேரத்திலும் இடிக்கலாம்  - சுப்பிரமணிய சாமி

கருணாநிதியின் தலையை வெட்டுவேன் (ராமர் பாலம் விவகாரத்தின்போது) - வேதாந்திரி சாமியார்

இந்துக்கள் 10குழந்தைகளை பெற வேண்டும். முஸ்லீம்களுக்கு கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு செய்யவேண்டும், ஓட்டுரிமையை ரத்துசெய்ய வேண்டும். - சாக்சி மகராஜ்

பாரத் மாதா கி ஜே என முழக்கமிடாதவர்கள் தலையை வெட்டுவேன் - பாபா ராம்தேவ்

பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும். பெரியாரை செருப்பால் அடிப்பேன் - ஹெச். ராஜா

இதுபோன்று இன்னும் எத்தனையோ பேர் பேசியிருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேர் நாக்கையும் வெட்டுவாரா ராஜேந்திர பாலாஜி..?