ஜெயலலிதா தொடங்கிவைத்த புரட்சித் திட்டம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 32


அரசு வழங்கும் கிலோ ஒரு ரூபாய் அரிசி, மாநகராட்சி இடம் போன்றவற்றை முறையாகப் பயன்படுத்தி மலிவு விலை உணவகத்தை நஷ்டமின்றி நடத்தமுடியும் என்பதற்கு தெளிவான அறிக்கை தயார் செய்தார் மேயர் சைதை துரைசாமி. இந்த அறிக்கையை எடுத்துக்கொண்டு அன்றைய நிதித்துறை செயலாளர் சண்முகத்தை சந்தித்துப் பேசினார்.

மலிவு விலை உணவகத்திற்கு ஆகும் செலவு, கிடைக்கும் வருமானம் மற்றும் ஏழை மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட சண்முகம் மிகுந்த ஆர்வமாகி விட்டார். அதன்பிறகு முதல்வரின் தனிச்செயலாளர் வெங்கட்ராமனை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து மேலும் பல அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேயர் சைதை துரைசாமியே நேரடியாக ஒவ்வொரு அதிகாரியையும் சந்தித்துப் பேசியதும், தெளிவான அறிக்கை சமர்ப்பித்ததும் மலிவு விலை உணவகத்திற்கு ஆதரவு உருவானது. முதலில் பரீட்சார்த்த ரிதியில் ஒருசில உணவகங்கள் மட்டும் தொடங்குவதற்கு அதிகாரிகள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 9 உணவகங்கள் மட்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சைதை துரைசாமியின் நேரடியான கண்காணிப்பில் உணவகங்கள் தயாராகின. 2013, மார்ச் 19-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சாந்தோமில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாணியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார். அதாவது இங்கு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஏன் தெரியுமா?

- நாளை பார்க்கலாம்.