கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பனைக் காண சென்ற ஆந்திராவைச் சேர்ந்த ரெஹானா பாத்திமா என்ற பெண்ணை ஐயப்பன் தண்டித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.
மக்கள் எதிர்ப்பை மீறி ஐயப்பனை தரிசனம் செய்த ரெஹானாவுக்கு என்ன நடந்திச்சு..? திடுக் தகவல்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனை காண பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது.மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பனை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சொல்கின்றனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை காண பெண்களுக்கென தனி கட்டுப்பாடுகள் உள்ளது. அதில் பெண் குழந்தைகள் பிறந்து 8 வயது முதல் மட்டுமே ஐயப்பனை காண முடியும் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே ஐயப்பனை தரிசிக்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் ஐயப்பனை காண அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என நீதிமன்றம் 28ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் ஐப்பசி மாத பூஜையின் போது பெண்கள் சபரிமலை ஐயப்பனை காண அனுமதிக்கப்படுவார்கள் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பல்வேறு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் கோவிலை சேர்ந்த தந்திரிகள் மற்றும் பொதுமக்கள் சபரிமலை ஐயப்பனை காண பெண்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல் ஊழியர் ஆனா ரெஹானா பாத்திமா மற்றும் பத்திரிகையில் பணியாற்றும் கவிதா என்ற பெண்ணும் இருமுடி கட்டி ஐயப்பனுக்கு விரதம் இருந்து ஐயப்பனைக் காணச் சென்றனர். இந்நிலையில் பக்தர்களால் அவர்கள் நடுவழியிலேயே தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாத்திமா மற்றும் கவிதா ஆகிய இருவரும் போலீஸார் பாதுகாப்புடன் சபரிமலைக்கு வந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் எதிர்பால் மீண்டும் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ரெஹானா பாத்திமா பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கொச்சியில் உள்ள போட் ரெட்டி கிளையில் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியாற்றி வந்தார்.
சபரிமலை விவகாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதைத் தொடர்ந்து அவரை பழரவிட்டம் நகரில் உள்ள கிளைக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஐயப்பனை தரிசிக்க அவர் எடுத்த முடிவுதான் இந்த ஒரு பணியிட மாற்றம் நடந்துள்ளது என பேசி வருகின்றனர். இதையடுத்து அவரை அந்த கிளையில் சென்று பணியாற்றும் போது பலரவிட்டம் கிளையில் இருந்து ரெஹானா பாத்திமாவை வெளியேற்ற வேண்டும் எனக் கோரி நேற்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் இது ஐயப்பன் அப்பெண்ணிற்கு அளித்த தண்டனை என பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்த தவறுக்காக ஐயப்பன் அவனும் வேண்டி விரும்பி கொண்டால் ஐயப்பன் அப்பெண்களை மன்னித்து விடுவதாகவும் பொதுமக்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.