செஞ்சி அருகே கொரானாவுக்கு என்ஜினியர் பலி? தீயாய் பரவும் தகவலின் உண்மை பின்னணி!

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஒரு வாலிபர் மர்ம காய்ச்சலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துள்ளது. மேலும், மக்கள் இடையே கொரோனா வைரஸ் காய்ச்சல் என்ற பீதியும் உலாவி வருகிறது.


சீனா முதல் உலகம் முழுவதும் உள்ள 78 நாடுகளுக்கும் கொரோனா வைரஸால் 2,981 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதற்கிடையில், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்த 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், சென்னை வேளச்சேரியில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கும் 22 வயது கொண்ட முஜிபூர் என்பவர் செஞ்சி அருகே உள்ள மீனம்பூர் கிராமத்தை சேர்ந்தவர். 

இவருக்கு சிலநாட்களாக காய்ச்சலால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே செஞ்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் தீரவில்லை. அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை மாநிலம் மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முஜிபூர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு இறந்தார்.

இந்நிலையில், முஜிபூர் கொரோனோ வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகி விட்டதாக சமூக வலைத்தளம் மற்றும் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதனை அறிந்த முஜிபூரின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனையில் கூறுகையில், முஜிபூரின் ரத்தமாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பபட்டு உள்ளது. பரிசோதனை முடிவில்தான் அவர் கொரோனோ வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளாரா? என்பது தெரியவரும். அதன் பின்னர் முஜிபூரின் உடல் உறவினர்களிடம் வழங்கப்படும் என்று மருத்துவமனை சார்ப்பில் தெரிவித்தனர்.

மேலும், இதனை குறித்து சுகாதாரதுறை அலுவலகத்தில் கேட்ட போது, அவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் தங்கி சைதாப்பேட்டையில் வேலை பார்த்து உள்ளார் என்ஜினீயர் முஜிபூர், எனவே மருத்துவ குழுவினர் அங்கு சென்றும் கள ஆய்வு நடத்தி முஜிபூர் யார் யாரிடம் பழகினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட சுகாதாரதுறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில் அவர்கள் தெரிவித்தார்.