5வது நாளாக இந்திய பங்குச்சந்தை மளமளவென வீழ்ச்சி..! காரணம் இதுதான்!

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸின் பாதிப்பு உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


லண்டனின் எஃப் டி எஸ் இ தொடங்கி, ஆசியாவின் நிக்கி வரை பல நாட்டு பங்குச் சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பால் முக்கியமாக சீனாவின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் என கடும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக சீனாவின் உள்நாட்டு உற்பத்தி பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சர்வதேச மற்றும் ஆசிய சந்தைகளின் பிரதிபலிப்பு இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது. அதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை தொடா்ந்து 5 வது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் நிலுவைத் தொகையை செலுத்தாத தொலைத்தொடா்பு துறை சேவை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பால். தொலைதொடர்பு சார்ந்த பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் இரண்டாவது காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அமைந்துள்ளதாகவும். வோடபோன் ஐடியா இரண்டாவது காலாண்டில் ரூ.50922 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறியுள்ளன.

சுற்றுலாத் துறையை சார்ந்த ஓயோ ஓட்டல்ஸ் நிறுவனம், 2018 - 19ம் நிதியாண்டின் நிதி நிலையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த நிதியாண்டில் 335 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதே காலகட்டத்தில் முந்தைய நிதியாண்டில் 44 மில்லியன் டாலர் நஷ்டத்தினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ONGC நிறுவனத்தின் பங்கு விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதன் முறையாக 100 ரூபாய்க்கு கீழ் சரிந்ததன் காரணமாக ஓஎன்ஜிசியின் சந்தை மதிப்பு சுமார் 1,25,740 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த ஆறு மாத காலத்தை ஒப்பிடுகையில். செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த அரையாண்டில் உள்நாட்டு எரிவாயு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும்.இதனால் இந்த பங்கின் மீதான நம்பிக்கையை முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக மதிப்பிடுகின்றனர் பங்குச் சந்தை நிபுணர்கள்.

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் முதலீட்டு நிறுவனமான கார்லைல் குழுமத்தின் கட்டுப்பாட்டில்.இந்தியாவில் இயங்கி வரும் எஸ்பிஐ கார்ட்ஸ் மற்றும் பேமெண்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் வரும் மார்ச் மாதம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்.ஐ.சி. வீட்டுக் கடன் நிறுவனத்துடன், ஐ.டி.பி.ஐ வங்கியை இணைக்க உள்ளதாக, கடந்த சில நாட்களாக செய்திகள் பரவியுள்ளதை அடுத்து கருத்து தெரிவித்த எல்.ஐ.சி நிறுவனம். எல்.ஐ.சி ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தை வேறு எந்த நிறுவனத்துடனும் இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை கூறியுள்ளது.

ஐ.டி.பி.ஐ வங்கியின் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது எல்ஐசி வீட்டுக் கடன் நிறுவனம். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனம் 5,763 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.