பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று சென்னை போர் விமானி அபிநந்தன் கெத்தாக கூறும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் தர முடியாது! டீ குடித்தபடியே பாக்., ராணுவத்திடம் கெத்து காட்டிய அபிநந்தன்!

இன்று காலை பாகிஸ்தான் போர் விமானங்களை துரத்தியபடிய சென்ற
அபிநந்தன் விமானம் அந்நாட்டு ராணுவத்தால் பின் பக்கத்தில் இருந்து தாக்கப்பட்டது.
அப்போது பாராசூட் மூலமாக கீழே குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்து
வைத்துள்ளது.
அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ முகாமில் வைத்து விசாரணை
நடத்தப்பட்டது. அப்போது பேசிய அபிநந்தன், தன்னை பாகிஸ்தான் ராணுவத்தின் வீரர்கள்
முதல் கேப்டன்கள் வரை அனைவரும் மிகவும் மரியாதையாக நடத்துவதாக கூறினார்.
மேலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தன்னை நடத்தும் விதம் தனக்கு
மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாகவும், மீண்டும் இந்தியா வந்தாலும் கூட தற்போது கூறுவதை
தான் மாற்றிக் கூறப்போவதில்லை என்றும் அபிநந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அனைவருமே ஜென்டில்மேன்கள்
என்றும், தான் உயிரோடு இருக்க காரணமே அவர்கள் தான் என்றும் அபிநந்தன் கூறியுள்ளார்.
அப்போது குறுக்கிடும் பாக் ராணுவ அதிகாரி, இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர் நீங்கள்
என்று கேட்கிறார்.
அதற்கு நான் இந்தியாவின் தெற்கு பகுதி என்று மட்டுமே கூற
முடியும், அதை தவிர்த்து வேறு எதையும் சொல்ல முடியாது என்று அபிநந்தன் தெரிவிக்கிறார்.
மேலும் நீங்கள் எந்த விமானத்தில் பாகிஸ்தானுக்குள் வந்தீர்கள் என்று அந்நாட்டு ராணுவ
அதிகாரி கேட்கிறார்.
தான் பாகிஸ்தான் சிறை பிடிப்பில் உள்ளேன் என்பதையும் தெரிந்தும்
இது போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது என்று துணிச்சலாக அபிநந்தன்
பதில் அளித்தார். இதே போன்று எந்த விமானத்தில் உள்ளே வந்தீர்கள் என்கிற கேள்விக்கும்
பதில் அளிக்க வாய்ப்பில்லை என்று கெத்து காட்டியுள்ளார் அபிநந்தன்.
தொடர்ந்து இந்திய விமானப்படையின் எந்த பிரிவில் பணியாற்றுகிறீர்கள்
என்கிற கேள்விக்கும் பதில் அளிக்க முடியாது என்று தெறிக்கவிட்டுள்ளார் அபிநந்தன்.
பிறகு நாங்கள் உங்களுக்கு கொடுத்த டீ எப்படி இருக்கிறது என்று பாக் அதிகாரி கேட்கிறார்.
அதற்கு ஸ்டைலாக டீ குடித்துக் கொண்டே மிகவும் சுவையாக இருக்கிறது நன்றி என்று கூறுகிறார். சுமார் ஒரு நிமிடம் 19 நொடிகள் ஓடும் வீடியோவை நீங்களே பாருங்கள்.