இந்தியா நியூஸிலாந்திற்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டது.
சூரியனால் தடைபட்ட இந்தியா-நியூஸி. போட்டி!

இதற்கு காரணம் மழை அல்ல. அதிக சூரிய வெளிச்சம். ஆட்டம் நடந்த மைதானத்தில் சூரிய வெளிச்சம் அதிகமாக இருந்ததால் பேட்டிங் செய்ய வசதியாக இருக்காது என நடுவர்கள் ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்திவைத்தனர். பின்னர்
தொடங்கிய
ஆட்டம்
ஒரு
ஒவர்கள்
குறைக்கப்பட்டு
49 ஓவர்களில்
156ரன்கள்
இலக்காக
இந்திய
அணிக்கு
நிர்ணயிக்கப்பட்டது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தெடுத்து அவுட் ஆகி வெளியேறினர். நியூஸிலாந்து அணி அணைத்து விக்கெட்களையும் இழந்து 157ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் அதிகபட்சமாக 64 ரன்களை எடுத்தார்.
இந்திய அணியின் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். ஷமி 3 விக்கெட்களையும், சஹால் 2 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கோஹ்லி தவானுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார்.கோஹ்லி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
சிறப்பாக விளையாடிய தவான் ஆட்டமிழக்காமல் 75 ரன்களை எடுத்தார். 34.5 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்தது. இதனால் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.