வாணியம்பாடி அருகே வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 மகள்கள்! 1 மகன்..! அப்படியும் அடங்காத ஆசை? வெளிநாட்டில் இருந்து வந்த கணவனால் மனைவிக்கு ஏற்பட்ட பயங்கரம்!

வாணியம்பாடி அருகே உள்ள ஜாப்ரபாத் பகுதியை சேர்ந்தவர் இர்ஷாத் கான் 32, இவரது மனைவி ஷபானா 30, இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் 5 மகன்கள் மற்றும் 1 மகளும் உள்ளார் இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இர்ஷாத் கான் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து 6 மாதத்துக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இர்ஷாத் கான் தனது மனைவி மற்றும் குழந்தைகளை காண தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இதையடுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். இந்நிலையில் தான் வெளி நாட்டிற்கு சென்றபோதும் தனது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் இருப்பதாக அவரது நண்பர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆத்திரமடைந்த இர்ஷாத் கான் குடித்துவிட்டு வந்து தினமும் ஷபானாவை சந்தேகப்பட்டு கடுமையாக திட்டியுள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இர்ஷாத் கான் அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் கடுமையாக குத்தியுள்ளார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் ஷபானா சரிந்து விழுந்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்து இர்ஷாத் கான் தப்பியோடியுள்ளார். இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே ஓடிவந்து பார்த்தபோது வயிற்றில் கடுமையான காயத்துடன் ஷபானா கீழே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பலத்த காயமடைந்த ஷபானாவை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஷபானா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரது கணவர் இர்ஷாத் கானை தீவிரமாக தேடி வருகின்றனர்.