சென்னையில் மனைவி இறந்து பல நாட்கள் ஆன நிலையில் தனது மனைவியை காப்பாற்ற கோரி அருகிலுள்ளவர்களிடம் கணவர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி சடலத்துடன் நாள் கணக்கில் குடும்பம் நடத்திய பேராசிரியர்! 108 ஆம்புலன்சை அழைத்து கூறிய பகீர் தகவல்!

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராஜகோபால் மற்றும் அவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு 8 வயதில் மகள் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்துள்ளனர். ராஜகோபால் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் அவரது மகள் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தனிமையில் வசித்து வந்துள்ளனர். தன் மகள் இறந்த துக்கத்தில் கல்யாணி வீட்டின் அருகே உள்ளவர்களிடம் பேச்சுக் கொடுப்பதை குறைத்துக் கொண்டுள்ளார்.
ராஜகோபாலும் அதேபோல் அருகில் இருந்தவர்களிடம் எந்த ஒரு பேச்சு வார்த்தையை வைத்துக் கொள்ளாமல் வேலைக்கு போவது வீட்டிற்கு வருவது என வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜகோபால் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் படுத்துள்ளாள் தன்னிடம் எதுவும் பேசவில்லை அவளுக்கு உதவி செய்ய வேண்டும் என அருகில் இருந்தவரிடம் உதவி கேட்டுள்ளார்.
இந்நிலையில் அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் உடனே ராஜகோபாலின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரது மனைவி இறந்த நிலையில் இருந்துள்ளார். மற்றும் அவரது உடல் பாதி அழுகிய நிலையிலும் அதிக அளவில் துர்நாற்றமும் வீசியுள்ளது. உடனே இதை பார்த்து அதிர்ந்த அருகில் இருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கல்யாணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடற்கூறு ஆய்வு முடிந்தபின்னர் கல்யாணியின் உடலை ராஜகோபால் இடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர் மற்றும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜகோபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.