சிட்னி: மேற்கூரை வழியாக ஊர்ந்து வந்த மலைப்பாம்பு படுக்கையில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் படுக்கை அறை மெத்தையில் 10 அடி நீள பாம்பு! பதற வைக்கும் சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை, குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள கிளாஸ்ஹவுஸ் மவுண்டெய்ன்ஸ் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் பாம்பு பிடிக்கும் தன்னார்வ அமைப்பினரை தொடர்புகொண்டு உதவி கேட்டார். தங்கள் வீட்டின் படுக்கையில் பாம்பு வந்துவிட்டதாக, அவர் கூறியிருக்கிறார்.
உடனடியாக, அந்த வீட்டிற்குச் சென்ற பாம்பு பிடிக்கும் நபர்கள், அங்கே படுக்கையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பாம்பை பிடிக்க முயன்றால் அது அடிக்கடி சீலிங் வழியாக சென்று ஒளிந்து விளையாட தொடங்கியது.
அந்த வீடு மலையில் கண்ணாடி ஜன்னல்களுடன் அமைக்கப்பட்டிருந்ததால் மலைப்பாம்பு இஷ்டம்போல மேற்கூரை, ஜன்னல்கள் வழியே ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. பிறகு, ஒருவழியாக, அந்த பாம்பை பிடித்து விட்டனர்.
வீட்டில் மேற்கூரையில் உள்ள லைட் ஃபிட்டிங் துளையில் ஓய்வு எடுப்பதற்காக படுத்திருந்த பாம்பின் எடை தாங்காமல் அந்த துளை உடைந்ததால், பாம்பு வீட்டின் உள்ளே நுழைந்துவிட்டதாக, பின்னர் தெரியவந்தது.
குறிப்பிட்ட பாம்பு பற்றிய புகைப்படங்களை பாம்பு பிடித்த Sunshine Coast Snake Catchers 24/7 அமைப்பினர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.