பட்டப்பகலில் பூங்காவில் காதலிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்! காதலன்களுக்கு பிறகு ஏற்பட்ட பரிதாபம்!

தங்களது பெண் தோழிகளை சித்ரவதை செய்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


முதல் சம்பவம் சாண்டாகுரூசை அடுத்த வகோலா என்ற இடத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட பெண் ஸ்டீவன் ஃபெர்னாண்டஸ் என்ற நபருடன் திருமண இணையதளம் மூலம் அறிமுகமானார். இருவரும் பழகிய நிலையில் ஸ்டீவனின் குணங்களும் இயல்புகளும் பிடிக்காதததையடுத்து அந்தப் பெண் திருமணத்துக்கு மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து சமூக வலைதளத்திலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்ட ஸ்டீவன் தொடர்ந்து அந்தப் பெண்ணை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து சமாதானமாக போகலாம் என்று கூறி பூங்காவுக்கு அழைத்துள்ளான் ஸ்டீவன். இதனை நம்பிக் சென்ற அந்த பெண்ணை அங்கு வைத்து தகாத இடங்களில் தொட்டு தொந்தரவு செய்துள்ளான்.

இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்டீவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு சம்பவம் முபையின் புறநகர் பகுதியான விலே பார்லேவில் நடைபெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட 21 வயதுப் பெண் ஹிமான்ஷு பகத் என்ற 21 வயது நபருடன் 4 ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக்கில் தோழியானார். பழக்கம் காதலாக மலர்ந்த போதும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டதால் அந்தப்பெண் தொடர்பை விலக்கிக் கொண்டார். 

இதையடுத்து அந்தப்பெண்ணை அடிக்கடி தொடர்பு கொண்டு தரக்குறைவாக பேசி வந்த ஹிமான்ஷு ஒருமுறை அந்தப் பெண்ணின் கல்லூரிக்கு வெளியே காத்திருந்து அந்தப் பெண் வெளியே வந்த போது பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு சென்றதும் தனது காம இச்சையை தீர்க்க பெண்ணிடம் வரம்பு மீறியுள்ளான்.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பகத் பெண்ணை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணை ஹிமான்ஷூவிடம் இருந்து மீட்டு ஆட்டோவில் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து அந்தப் பெண்  தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஹிமாஷு மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.