விஷம் குடித்த உயிரிழந்த மாமனார்! கேள்விப்பட்ட மருமகளும் விஷம் குடித்து உயிரை விட்ட அதிர்ச்சி சம்பவம்! பதற வைக்கும் காரணம்!

குடும்பப் பிரச்சனையால் மாமனார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அதை கேள்விப்பட்ட மருமகளும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அனியாலை கிராமத்தை சேர்ந்த வேலு என்பவர் விவசாயம் செய்து வருகிறார். கடன் உள்ளிட்ட பிரச்சனைகளால் வீட்டில் அடிக்கடி மருமகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனையின் விரக்தியில் இருந்த விவசாயி வேலு விவசாய நிலத்திற்கு சென்றார்.

அங்கு பயிர்களை காக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். இதை பார்த்த சக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வேலு பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையே மாமனார் வேலு உயிரிழந்ததை கேள்விப்ட்ட மருமகள் கலைவாணியும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமனார் தற்கொலை செய்து கொண்டதால் போலீஸ் தன்னை விசாரித்து கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் மருமகள் கலைவாணி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இரண்டு பேரின் தற்கொலை சம்பவத்தை வழக்குப்பதிந்த களம்பூர் காவல் நிலைய போலிசார் குடும்ப பிரச்சனையா? அல்லது வேறு காரனமா என்று விசாரனை நடத்தி வருகின்றனர்