கேரள மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தையை காண வெளிநாட்டில் இருந்து வந்த மகனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.
என் மகனை பார்க்கணும்! உயிருக்கு போராடிய தந்தை! ஒரே மருத்துவமனையில் இருந்தும் கடைசிவரை முடியாத சோகம்! காரணம் கொரானா!

ஒரே மருத்துவமனையில் இருந்தும் கடைசி நேரத்தில் கூட தனது தந்தையை காண முடியாததால் மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் லினோ ஆபெல் இவர் கத்தாரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மார்ச் மாதம் 7 ஆம் தேதி அவரது சகோதரரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
அதில் தந்தை இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது கட்டிலிலிருந்து கீழே விழுந்ததாகவும் அதில் அவருக்கு பலமான அடி ஏற்பட்டு மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உடனே பதறிப்போன லினோ தனது தந்தையை பார்ப்பதற்காக தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் விடுப்பு வாங்கிக் கொண்டு தனது சொந்த ஊரான கேரளாவுக்கு வந்துள்ளார்.
இதையடுத்து விமானம் மூலம் கேரளா வந்த அவருக்கு தொண்டையில் எரிச்சல் இருப்பதைஉணர்ந்துள்ளார். இதையடுத்து உடனே கேரளாவில் உள்ள மருத்துவமனையில் தாமாகவே முன்வந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவரது தந்தையையும் கோட்டையம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தான் அனுமதித்துள்ளனர்.இதையடுத்து மார்ச் 9 ஆம் தேதி அவரது தந்தை இறந்துவிட்டதாக அழைப்பு வந்துள்ளது. உடனே பதறிப்போன லினோ தனது சகோதரரிடம் எந்த மருத்துவமனை என கேட்டுள்ளார். அதற்கு கோட்டையம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை என அவர் கூறியதும் உடனே லினோ அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தானும் அதே மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கடைசி நேரத்தில் கூட அவரது முகத்தை காண முடியாமல் தவித்துள்ளார்.பின்னர் வீடியோ கால் மூலம் அவரது தந்தையின் முகத்தைப் பார்த்தது அங்குள்ள அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து வெளிநாட்டிலிருந்து தனது தந்தையை காண வந்த மகனும் தந்தையும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் இருவரும் ஒருவரை ஒருவர் முகத்தை கூட காணாமல் இருந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.