மும்பை: ஆடையின்றி உடற்பயிற்சி செய்யுங்கள், என்று நடிகை மலைகா அரோராவுக்கு ரசிகர்கள் அட்வைஸ் கூறியுள்ளனர்.
17 வயதில் மகன் இருக்கிறான்! மறந்து விட்டீர்களா! 47 வயது நடிகை அணிந்து வந்த உடையால் சர்ச்சை!

பாலிவுட் நடிகை மலைகா அரோரா, உயிரே படத்தில் வரும் தையா, தைய்யா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலமாக, இந்திய அளவில் பிரபலமடைந்தவர்.
தற்போது 40 வயதை கடந்துவிட்டாலும், தீவிர உடற்பயிற்சி செய்து, உடலை மிகவும் சிக்கென பராமரித்து வருகிறார். அத்துடன், ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யும்போது சில புகைப்படங்கள், வீடியோ எடுத்து, அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்வதையும் மலைகா அரோரா வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால், இப்படி அவர் பகிரும் ஜிம் புகைப்படங்கள், வீடியோ பலவற்றிலும் அரைகுறை ஆடைகளுடன் மிகவும் ஆபாசமாக உள்ளதாக, அவர் மீது ரசிகர்கள் கண்டனம் தெரிவிப்பது வழக்கமாக உள்ளது.
இதற்கேற்ப சமீபத்தில் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்தபோது எடுத்த புகைப்படங்களை மலைகா அரோரா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
''ஒரு வயதுக்கு வந்த மகனை பெற்றுள்ள மலைகா இப்படி அரைகுறை ஆடைகளுடன் புகைப்படங்களை வெளியிடுவது தவறான செயல். இது இந்திய தாய்மார்களை புண்படுத்தக்கூடியதாக உள்ளது.
உங்களைப் போன்ற நடிகைகளுக்கு வெட்கமே கிடையாது. இப்படி பொது வெளியில் அரைகுறை புகைப்படங்களை வெளியிடுவதற்குப் பதிலாக ஆடையே அணியாமல் நிர்வாணமாகவே உடற்பயிற்சி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்,''. என பலரும் கமெண்ட் பகிர்ந்துள்ளனர்.