பிக்பாஸ் ஜூலியின் காதலரை தூக்கிச் சென்று லாடம் கட்டிய போலீஸ்!

சென்னையில் நடிகை ஜூலியின் காதலனை போலீசார் தூக்கிச் சென்று லாடம் கட்டியுள்ளனர்.


சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதிக்கு நேற்று ஜூலி தனது காதலன் ஹம்ரானுடன் வந்துள்ளார். அப்போது அவர்கள் காரை நிறுத்தும் போது மற்றொருவர் கார் மீது மோதியுள்ளது.

இதனால் அந்த நபர் ஜூலியுடன் சென்று காரை பாத்து ஒட்டக் கூடாதா? என்று கேட்டுள்ளார். அந்த சமயத்தில் ஜூலியுடன் இருந்த அவரது காதலன் ஹம்ரான் அந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதனால் ஜூலியின் காதலன் அந்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது ஜூலி காதலனுக்கு ஆதரவாக வேறு சிலதும் வந்து அந்த நபரை தாக்கியுள்ளனர்.

இதன் பிறகு தான் தாக்கப்பட்ட நபர் வேப்பேரி காவல் நிலைய காவலர் பூபதி என்பது தெரியவந்தது. உடனடியாக ஜூலி தனது காதலனுடன் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.,

இதனை தொடர்ந்து எழும்பூர் காவல் நிலையத்தில் காவலர் பூபதி தன்னை தாக்கிய நடிகை ஜூலி மற்றும் அவரது காதலன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணைக்கு வந்த ஹம்ரானை போலீசார் முதலில் உள்ளே தூக்கிச் சென்று லாடம் கட்டியுள்ளனர்.

காவலர் பூபதி சாதாரண உடையில் இருந்த காரணத்தினால் அடையாளம் தெரியவில்லை என்று ஹம்ரான் கூறியுள்ளார். இதனை அடுத்து சமாதானமாக போக விரும்பி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.