முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மரியாதை..!

கொரோனா காலத்தில் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை, மரியாதை அணிவிப்பது தள்ளிவைக்கப்பட்டிருந்தது.


சில தினங்களுக்கு முன்புதான், சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கு அரசு அனுமதி கொடுத்தது. இந்த நிலையில், முதல் நிகழ்வாக, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை தியாகத்தை போற்றும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதே போன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு, அமைச்சர்கள், ஆட்சியர்கள் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், உள்ளிட்டோர் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.