எடப்பாடிதான் என்றென்றும் முதல்வர். அமைச்சர் செல்லூர் ராஜூக்கு ராஜேந்திரபாலாஜி பதிலடி

தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒன்றுகூடி, முதல்வரை தேர்வு செய்வார்கள். இதுதான் அ.தி.மு.க.வில் வழக்கம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதற்கு பதிலடியாக எடப்பாடியார்தான் என்றும் முதல்வர் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.


இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தை சந்திப்போம்; எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம்; வெற்றி கொள்வோம்; 2021-ம் நமதே- என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்சனைக்கு முதல்வரும், துணை முதல்வரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தலுக்கு பின் முதல்வரை தேர்வு செய்தால் பிரச்சனை வரும். குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களுக்குள் போர் ஆரம்பமாகிவிட்டது. மீண்டும் ராஜேந்திர பாலாஜி வாய் திறக்க ஆரம்பித்துவிட்டார். என்ன நடக்குமென்று தெரியவில்லையே…