எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தேடித்தந்துள்ளார்! குவியும் பாராட்டுக்கள் !

நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்துவருகிறது. இதனை தீர்ப்பதற்கு வழி தேடினார் எடப்பாடி பழனிசாமி.


அந்த வகையில் கடும் துயரத்தில் இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நன்மை செய்யும் வகையில், நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தார்.

அந்த அறிவிப்பை நடைமுறைக்கு வரும் வகையில், சட்ட மசோதா இன்று தமிழக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கரால் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த விஷயத்தில் குறைந்தது 7 ஆண்டுகளாவது அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எப்படியோ தமிழக மாணவர்களுக்கு அதுவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய விடியல் கிடைத்துள்ளது.

அரசு பள்ளிக்கு மதிப்பும் மரியாதையும் தேடித்தந்துள்ள எடப்பாடி பழனிசாமி அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.