வாக்கிங் சென்ற பெண்ணிற்கு நடுரோட்டில் நேர்ந்த விபரீதம்! காமுக இளைஞன் அடாவடியாக இச்சை தீர்ப்பு!

மும்பையில் காலை நடைப் பயிற்சி மேற்கொண்ட பெண் ஆய்வாளரை புதரில் தள்ளி அத்துமீறி நடந்துகொண்ட குடிகாரனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பையின் கர் என்ற இடத்தைச் சேர்ந்த அந்தப் பெண் கார்ட்டர் சாலையில் தனது சகோதரனுடன்  நடை பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு ஆஸ்துமா இருப்பதால் தனது சகோதரனின் வேகத்துக்கு நடக்க முடியாமல் பின் தங்கிவிட்டார். 

இந்நிலையில் தனக்கு முன்னாள் பாதையை மறைத்துக்கொண்டு தள்ளாடியபடி நடந்து  சென்ற குடிகார நபரை பாதையின் ஒரு ஓரமாக நடந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அத்திரத்துடன் திரும்பிய அந்த நபர் அந்தப் பெண்ணை அருகில் இருந்த புதரில் பிடித்துத் தள்ளி கழுத்தை அழுத்தமாக பிடித்துக்கொண்டு முத்தம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அலறிய அந்தப் பெண் உடன் நடைப் பயிற்சி மேற்கொண்டவர்களை உதவிக்கு அழைத்தார். ஆனால் அவர் பாசாங்கு  செய்வதாகக் கருதி அவர்கள் உதவிசெய்யாமலே கடந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வலுக்கட்டாயமாக தன்னை அந்தப் பெண் விடுவித்துக்கொண்டு அந்த நபரிடம் இருந்து தப்பிச் சென்ற போது அவரது  சகோதரன் திரும்பி வந்தார். அந்த நேரத்தில் ரோந்துப் போலீசாரும் வந்ததை அடுத்து குடிகார நபர் தப்பியோடினான்.

தனக்கு நேர்ந்தது குறித்து அந்தப் பெண் கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரைத் தேடத் தொடங்கினர். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவனது  பெயர் முகமது  நவ்ஷாத் அகமது என தெரிய வந்தது. அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.